‘சவால்’ – பசுவய்யா கவிதை…!

“நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.

வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மன வலியுண்டு.

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்

கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்…

– 1972 நவம்பரில் அஃக் இதழில் வெளியான கவிதை…

Comments (0)
Add Comment