பனிப்பொழிவில் சிக்கிய 370 சுற்றுலாப் பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஆண்டுதோறும் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம்.

குறிப்பாக கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கோ எனப்படும் சாங்கு ஏரி, ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு நிறத்தில் காட்சியளிப்பதோடு, குளிர்காலத்தில் உறைந்து காணப்படும் என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த ஏரிக்கு வந்துச் செல்கின்றனர்.

இந்த ஆண்டும் அதேபோல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சாங்கு ஏரிக்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு, சுற்றுலாவிற்காக வந்திருந்த நிலையில், அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் ஏரியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தப் பனிப்பொழிவில் இருந்து 700 பேரை மீட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment