சட்டமசோதாவை நிராகரிக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் நிராகரிக்க முடியாது என்றும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

Comments (0)
Add Comment