கொஸ்தலை ஆற்றில் கலக்கும் கழிவுகளால் ஆபத்து!

கொஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப்பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் திடீரென கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.

வழக்கமாக எண்ணூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால் கருமை நிறத்தில் மாறும் கொசஸ்தலை ஆறு, மஞ்சள் நிறமாக மாறியுள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கூறும் நிலையில், தற்போதைய மஞ்சள் நிற கழிவு எங்கிருந்து வந்தது, தொழிற்சாலை கழிவா அல்லது வேறு ஏதாவது கலந்துள்ளதா என அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  உடனடியாக தமிழக முதலமைச்சர், மீன்வளத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)
Add Comment