பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கோவை மாநகரில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தமன்னா என்ற இளம்பெண் பயங்கர ஆயுதங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புகைப்பிடித்தபடி, கையில் பட்டா கத்தியுடன் கானா பாடலுக்கு நடனமாடுவது போல் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

எனவே அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Comments (0)
Add Comment