சமூகநீதிதான் திராவிட இயக்கத்தின் குறிக்கோள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தோள்சீலைப் போராட்ட 200-வது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது.

இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் வரவேற்று பேசினார்.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் மனோ தங்கராஜ், பீட்டர் அல்போன்ஸ், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூகநீதிதான் திராவிட இயக்கத்தின் ஒரே குறிக்கோள். திமுக அதை நிச்சயம் நிறைவேற்றும்.

சமூகத்தில் பரவிக்கிடக்கும் ஆயிரமாண்டு அழுக்கைகளை ஒரு நூற்றாண்டில் மொத்தமாக துடைத்து விட முடியாது. அப்படிப்பட்ட சமூக அழுக்குகளை சட்டத்தாலும், மனமாற்றத்தாலும் தான் மாற்ற முடியும். அதுவரை சமூகநீதிப் போராட்டத்தைத் தொடரும்” என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மொழிப் பாதுகாப்பு, கூட்டாட்சி தத்துவம், மாநிலங்களின் உரிமைகள் மீட்பு போன்றவற்றிற்காக தொடர்ந்து போராட வேண்டிய தேவை உள்ளது. அதற்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment