ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.
விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள “உருட்டு… உருட்டு” பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதே மில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
அடுத்து வெளிவந்த ஸ்னீக்பீக்ல் மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான, நையாண்டி தனமாகவும், அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
அடுத்ததாக வெளியான ஸ்னீக்பீக்ல் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சிப் பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது பப்ளிக் படத்தின் முதல் பாடலான “உருட்டு உருட்டு” பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யுகபாரதி எழுதியுள்ள “உருட்டு உருட்டு” பாடல் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளது.
பாடல் வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கருத்துகளுடன் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளது.