நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் விண்கலம், உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் பரிசோதனை வண்ணக் கேமராவால் எடுத்த படத்தில் மணல் பரப்புகளில் வட்ட வடிவிலான குழிகள் பதிவாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் மணல் திட்டுகள் இருந்தாலும், இந்த மணல் திட்டுகள் அனைத்தும் முற்றிலும் வட்டமாக அமைந்திருப்பது அசாதாரணமானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வட்ட வடிவிலான குழிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான விரிவான விளக்கம் விரையில் அளிக்கப்படும் எனவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.