– பாஜக அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடைபெற்று வருவதே எனது யாத்திரைக்கான அவசியத்தை ஏற்படுத்தியது. ஊடகங்கள், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகிய அனைத்தும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.
மேலும், இந்தியாவில் நடப்பதை பிபிசி தற்போதுதான் பார்க்கிறது. ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது. செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் கடுமையாக தாக்கப்படுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
பாஜக அரசுக்கு இணக்கமாகச் செல்லும் செய்தியாளர்கள் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர். உண்மையை எழுதும் ஊடகங்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றன.
பிபிசி, இந்திய அரசுக்கு எதிராக எழுதுவதை நிறுத்தினால் அனைத்தும் சரியாகிவிடும். அவர்களுக்கு எதிரான வழக்குகளும் காணாமல் போய்விடும்” எனக் கூறினார்.