காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 1000 பேர் கைது!

தமிழ்நாடு முழுவதும் பிடிவாரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில்,

“தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால் பிறக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையினரிடம் அறிக்கை கோரி இருந்தது.

இதுதொடர்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் பிடிவாரண்டுகளை உடனடியாக நிறைவேற்ற கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுகளை நிறைவேற்றி சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கடந்த (பிப்ரவரி) 28-ம் தேதி முதல் வருகிற (மார்ச்) 9-ம் தேதி வரை 10நாட்கள் ஆபரேஷன் வாரண்ட் என்ற பெயரில் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது நிலுவையில் உள்ள அனைத்து நீதிமன்றம் பிடிவாரண்டுகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி முதல் 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 1,004 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது. 

Comments (0)
Add Comment