பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி!

 – மத்திய நிதி அமைச்சகம் தகவல்

கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன. கடந்த ஆண்டைவிட கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Comments (0)
Add Comment