இயக்குநர் பாண்டிராஜ், பல வெற்றிப்படங்களைத் தந்தவர். அவருக்கு இந்த கதியா என்று கேட்கும் அளவுக்கு முன்னணி கதாநாயகர்கள் கால்ஷீட் கொடுக்காமல் தண்ணி காட்டுகிறார்களாம்.
சிவகார்த்திகேயன் தொடங்கி கார்த்தி வரை ஏகப்பட்ட நடிகர்களின் தேதிக்காக அவர் காத்திருக்கிறார்.
இத்தனைக்கும் இவரது இயக்கத்தில் படத்தைத் தயாரிக்க எப்போது வேண்டுமானாலும் தயார் எனச் சொல்லி இருக்கிறது சன் பிக்சர்ஸ். ஆனாலும், ஹீரோக்களைப் பிடிக்க முடியாமல் படாதபாடுபடுகிறார் பாண்டிராஜ்.
கிடைத்த இடைவெளியில் மாஸ் ஆக்ஷனாக இரண்டு ஸ்கிரிப்டுகளை எழுதி வைத்திருக்கிறாராம். ஸ்டார்ட் ஆக்சன் சொல்வதுதான் பாக்கி.
பெரிய ஹீரோக்களின் தேதி தள்ளிக்கொண்டே போனால், புதுமுகங்களை வைத்தாவது ஒரு படத்தை எடுத்துவிடவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டாராம் இயக்குநர் பாண்டிராஜ்.