திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் – சங்கர் வீர வரலாற்றுச் சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன.
இங்கு பொன்னர் – சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் உள்ளனர்.
இந்தக் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து வீரப்பூர் ஆலய திடலில் பெரிய காண்டியம்மன் யானை வாகனத்திலும், பொன்னர் குதிரை வாகனத்திலும் புறப்பட்ட வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக மணப்பாறை அருகே வீரமலை அடிவாரத்தில் படுகளம் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருகிறது.