பதற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை கையிலெடுக்காதீர்!

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், ‘சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டிலுள்ள பல்வேறு பழைமை வாய்ந்த இடங்கள் மற்றும் கலாசார, மத முக்கியத்துவப் பகுதிகள், கொடூரமான அந்நிய படையெடுப்பாளா்கள், அவா்களது சேவகா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களின் பெயரில் உள்ளன என்றும் சாதாரண இடங்கள் மட்டுமல்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பெயா்களையும் படையெடுப்பாளா்கள் மாற்றினா்.

அந்த இடங்களின் உண்மைப் பெயரைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தொல்லியல் துறையினரை ஈடுபடுத்த வேண்டும். இதற்காக ‘மறுபெயரிடும் ஆணையம்’ என்ற தனி ஆணையம் ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்றுக் கோரியிருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப்,பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், “நமதுநாடு மதசார்பற்ற நாடு. இதுபோன்ற மனுக்கள் பிரச்னைகளை உருவாக்கி நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும்” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

Comments (0)
Add Comment