உச்சநீதிமன்றம் அதிருப்தி
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார் .
ஆனால், ஒரு வேட்பாளர், கிரிமினல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும் அவர் அமைச்சராகவோ, மக்களவை உறுப்பினராகவோ அல்லது சட்டப் பேரவை உறுப்பினராகவோ தொடர்கிறார். இப்படி ஒரு மோசமான நிலைமை நமது நாட்டில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், “மேற்கத்திய நாடுகளில், சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவதில்லை. இங்கு அடிமட்ட அளவில் கூட ஊழல் உள்ளது. அதுதான் உண்மையான பிரச்சினையாக உள்ளது.
அதோடு, இந்த விஷயத்தில் என்ன நிலை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையமும், ஒன்றிய அரசும் 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் எனக் கூறி வழக்கை ஏப்ரல்முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.