8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மூனி 75 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் மரிசான் கேப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 157 ரன்களை எடுத்தால் உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 61 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் மேகன் ஷட், ஆஷ்லே கார்ட்னர், டார்சி பிரவுன், ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.