34 லட்சம் பேரைக் காப்பாற்றிய கொரோனா தடுப்பூசி!

ஆய்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தகவல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்; இந்தியாவின் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான பிரச்னைகளின் பொருளாதார பாதிப்பு மதிப்பீடு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியா திறம்பட செயலாற்றி கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் செயல்பாடு முக்கிய பங்கு வகித்துள்ளது.

அதோடு, கிராமங்கள் தோறும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் 34 லட்சம் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 407 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை தடுத்ததன் மூலம் சாதகமான பொருளாதார தாக்கத்தையும் தடுப்பூசி திட்டம் ஏற்படுத்தி உள்ளது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comments (0)
Add Comment