‘சந்திரமுகி 2’ படப்பிடிப்புத் தளத்தில்!

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கி வருகிறார்.

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியா, ராதிகா சரத்குமார், சுரேஷ் மேனன், ரவி மரியா, சிருஷ்டி டாங்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தின் புதிய புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கங்கனா ரனாவத்சிருஷ்டி டாங்கோசுரேஷ் மேனன்மகிமா நம்பியாரவி மரியாராகவா லாரன்ஸ்ராதிகா சரத்குமார்லட்சுமி மேனன்
Comments (0)
Add Comment