மார்க்சிய சிந்தனை இந்தியாவுக்கு ஏற்றதில்லையா?

– சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்ச்சி இருக்கை சார்பில்,

பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த தீனதயாள் உபாத்யாயா எழுதிய dispersion of thought and integral humanism எனும் புத்தகங்களின் தமிழாக்க நூல்கள், சிந்தனைச் சிதறல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய புத்தகங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர்,  75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளைப் பின்பற்றியதே காரணம் என்றும், பரினாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆப்ரஹாம் லிங்கனை உதாரணமாக காட்டுவது மேற்கத்திய அடிப்படை மனநிலை எனவும், இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது எனக் கூறினார்.

காரல் மார்க்ஸ் பற்றிய் ஆளுநரின் இந்தப் பேச்சு தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment