ராஜாஜிக்கு முன்னால், சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக (அப்போது முதல்வர் என்று அழைக்கப்படவில்லை) இருந்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா.
ஸ்ரீவில்லிபுத்தூரில் படித்து, அங்கேயே நின்று தேர்தலில் வெற்றி பெற்ற அவர்தான், அங்கிருந்த ஆண்டாள்கோவில் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக்கினார்.
அவர் வாழ்ந்த வீட்டில் தற்போது பெரிய நூலகம் இயங்கி வருகிறது. அதன் பெயர் “காந்தி கலை மன்றம்’.
– 1955 ஆம் ஆண்டில் இந்த மன்றத்தைத் திறந்து வைத்தவர் அன்றைய குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்.