சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், மைனா படத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட நடிகையாக மாறினார்.
கதைகளின் நாயகியாக வலம் வந்த அமலாபால், பிறகு கமர்ஷியல் படங்களில் நடித்தார். அடுத்து காதலில் விழுந்து இயக்குநர் விஜய்யை திருமணம் செய்தார். அந்த வாழ்க்கை ஒரு கட்டத்தில் பிரிவைத் தர, அது அமலாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாதபோதும், பிற மொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கடாவர் என்கிற படத்தை தயாரித்து, அதில் சிரமங்களை சந்தித்தார். இறுதியில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் படத்தை வெளியிட்டு தப்பித்தார்.
அந்த பிரச்னை முடியும் முன்பே, அவரது நண்பர் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளித்தார்.
இப்படி அடுத்தடுத்து பிரச்னைகள் வந்துபோக, மிகவும் நொந்துபோன அவர் மன நிம்மதிக்காக கோயில்களுக்குச் சென்றார்.
குறிப்பாக பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்த மறுநாளே ரோப்காரில் பயணம் செய்து, முருகனை வழிபட்ட அமலா பால், புதுவித ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ள அமலா பால், அங்குள்ள Pyramids Of Chi என்கிற ஆசிரமம் போன்ற ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.
பேக்கேஜ் முறையில் அங்கு தங்கி, தியானம், வழிபாடு, யோகம், போதனை உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படும்.
தீவிர ஆன்மிக, மன அமைதியை தரும் அந்த சூழலில் அமலா பால் குறைந்தது இரண்டு நாட்கள் தங்குவாராம்.
மீண்டும் இந்தியா திரும்பிய பின் ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுப்பார் என்கிறார்கள். பார்க்கலாம்.