இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்துவருகிறது.
சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றிபெற்றுள்ளது.
தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர்.
தயாரிப்பாளர் குஷ்மாவதி, “அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி.
‘அயலி’ வெளியீட்டின்போது, ஜீ5 இல் இது ஒரு முத்திரை பதிக்கும் தொடராக இருக்கும் என்று கூறியிருந்தோம்.
இன்று, அயலி அதை நிரூபித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும், அடைகிறேன்” என்றார்.
நடிகை தாரா, “அயலி போன்ற ஒரு நல்ல படைப்பில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
நடிகர் ‘அருவி’ மதன் பேசுகையில், “என் கதாபாத்திரம் பார்த்தவர்களின் தந்தையின் சாயலைப் பிரதிபலிப்பதாகப் பலர் பாராட்டினார்கள் அது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
இந்தத் தொடரை மாற்றி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் ஒரு திரைப்படமாக வெளியிடுமாறு ஜீ5 தளத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்.
நடிகர் பிரகதீஸ்வரன், “‘அயலி’ தொடரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஜீ5 தளத்தின் விவேக் சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் மணிகண்டன் சாருக்கு நன்றி.
இந்தத் தொடரின் வெற்றிக்கு இந்த மூன்று நபர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்” என்றார்.
நடிகை லவ்லின் சந்திரசேகர், “’அயலி’ தொடரை வெற்றிப்படைப்பாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய முத்துக்குமார், சார், குஷ்மாவதி மேடம் மற்றும் ஜீ5 ஆகியோருக்கு நன்றி.
இந்த படைப்பில் நல்ல செய்தி உள்ளது. இப்படியான நல்ல தொடரின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்” என்று நெகிழ்ந்தார்.
நடிகை காயத்ரி பேசுகையில், “முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து இந்தத் தொடரைப் பற்றி முழு குழுவினரும் பாஸிடிவாகவே உணர்ந்தோம், அது இப்போது மக்களிடத்திலும் பிரதிபலித்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை அபி நக்ஷத்ரா, “என் நடிப்பை ஏற்றுக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.
என்னைத் தமிழ்ச்செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி” என்றார்.
நடிகர் சிங்கம்புலி பேசும்போது, “அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி.
இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்று நகைச்சுவையாகப் பேசினார்.
இயக்குநர் முத்துக்குமார், “இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” என்றார்.