ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றக் குழு!

– ஆய்வு செய்யக் குழு அமைத்து அரசாணை

தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி டிசம்பர் 27-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment