வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை போனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார்.
51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார்.
அப்போது வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்களை பொருத்த வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் கொண்ட கேமராக்களை ஏடிஎம்களில் பொருத்த வேண்டும், எடிஎம்களை உடைத்தால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், அருகில் உள்ள காவல் நிலையங்களிலும் எச்சரிக்கை மணி ஒலிக்குமாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேள்கொள்ள வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.