காலதாமதமாகத் தொடங்கிய உப்பு  உற்பத்தி!

தமிழ்நாட்டில் பருவமழை தாமதமாக முடிவடைந்த நிலையில், தற்போது வேதாரண்யம் பகுதியில் காலதாமதமாக உப்பு  உற்பத்தி தொடங்கியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 6500 ஏக்கர் பரப்பளவில் ரசாயன உப்பும் 3500 ஏக்கர் பரப்பளவில் உணவு உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்படும். இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணி தொடங்கியது.

ஆனால், கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழை காரணமாக உப்புப் பாத்திகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கியுள்ளது. மழை நீரால் சூழப்பட்ட உப்பு பாத்திகளில் சேற்றை அகற்றி உப்பு உற்பத்திக்கான பணியில் பெரும்பாலான உப்பு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment