நினைவில் நிற்கும் வரிகள் :
***
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
(மனுசன மனுஷன்…)
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய கையிலே
இது தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியலே
(மனுசன மனுஷன்…)
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
(மனுசன மனுஷன்…)
ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே
(மனுசன மனுஷன்…)
– 1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘தாய்க்குப்பின் தாரம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மருதகாசி.