அந்தக் காலத்தில் காபி இல்லை!

தமிழின் முன்னணி ஆய்வாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, ’அந்தக் காலத்தில் காபி இல்லை’ என்றொரு ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

அந்த நூலில், பிரிட்டிஷ் காலத்தில் எப்படி இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்தில் காபி அறிமுகமானது என்பது பற்றி விரிவாக எழுதியிருப்பார்.

அண்மையில் பேஸ்புக் குறிப்பில் கலை விமர்சகர் இந்திரன், காபியின் வரலாறு என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

பதினைந்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காப்பி 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நுழைந்தது.

ஏமன் நாட்டு அக்பர் அல்கப்பா என்பவர் முதல் முதலில் காபி கொட்டைகளை வறுத்து காப்பி தயாரித்தார்.

பாபா பூதன் என்ற இஸ்லாமிய மெக்காவில் இருந்து வரும் போது சில காப்பி பீஸ்களை மைசூருக்கு கடத்திக் கொண்டு வந்தார். காப்பி சாப்பிடுவதில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறேன்.

ஆனால் வெற்றிகரமாக காப்பியிலிருந்து தப்பித்துவிட்டாலும் அவ்வப்போது சுவைக்கவே செய்கிறேன் என்று தன் பதிவில் குறிப்பிடுகிறார் இந்திரன்.

Comments (0)
Add Comment