– கண்ணதாசனை சீண்டிய இயக்குநர்
“ஆதிபராசக்தி’ படத்தில் ஒரு பல்லவிக்காக கண்ணதாசன் பத்து நாள் ரொம்பப் பாடுபட்டார். ஏனோ சரிப்பட்டு வரவில்லை.
கம்பீரமாக வரவேண்டிய பல்லவி வரவில்லை. கவிஞர் ஏதேதோ சொல்ல, “இளமை பூரா நாத்திகக் கும்பலோடு பழகிட்டீங்க… அதான் பக்தி வரிகள் வரமாட்டேங்குது” என்றேன் அவரை உசுப்பேற்ற.
கவிஞருக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, பாரதியின் ‘சொல்லடி சிவசக்தி…’ டைப்பில், “சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ… எனக்கு இடர் வருமோ…” என்று ஜம்மென்று பல்லவி விழுந்தது.
இதற்கப்புறம் பதினொரு பாட்டு எழுத கவிஞருக்கு ஒரேயொரு மணி நேரம்தான் ஆனது.
“இதை எதுக்குச் சொல்கிறேன் என்றால் இமோஷன் வரணுமென்றால் பாரதி, வள்ளலார், அருணகிரி நாதர் எல்லாம் படிக்கணும்.
இன்றைக்கு எத்தனை கவிஞர்கள் இதையெல்லாம் படிக்கிறார்கள்.”
– இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கண்ணதாசனின் பாடல் எழுதும் திறமை பற்றி பேட்டி ஒன்றில் சொல்லியது.
நன்றி: முகநூல் பதிவு.