கடலுடன் ஒரு கலந்துரையாடல்…!

கடலே
தண்ணீரே உடல் ஆனாய்.
அலைச் சரிகை ஆடையிலே
அழகானாய்.!

வாயாடி நீ
அரைநொடி கூட உன்
அலை வாயை மூடுவதில்லை.

படகுகள் நடைபயிலும்
பளிங்கு மேடை நீ !

குளித்து கொண்டே இருக்கும்
மீன்களின் கூடை!

எல்லா நதிகளும்
சேர்ந்து திரண்டிருக்கும்
சீரணி அரங்கம்!

நாள்தோறும் கரையை நீ
நனைக்கிறாய்
கடற்கரையில்
நடமாடும் மனிதர்களின்
இதயத்தை நனைப்பாயா?

– கவிஞர் மேத்தா எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலிலிருந்து.

Comments (0)
Add Comment