அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ‘சண்டே’!

இயக்குநர்கள் சதீஷ் கீதாகுமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படமான சண்டே படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹாலிவுட் சைஃபை படங்கள் இங்கு திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

ஆனால் நம் தாய்மொழியில் அதிகமாக சயின்ஸ் பிக்சன் படங்கள் உருவாவதில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் வகையில், இந்தியாவில் முதல் முறையாகத் தமிழில் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறது “சண்டே” திரைப்படம்.

கதை திரைக்கதையை இயக்குநர்கள் சதீஷ் கீதாகுமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து எழுதியுள்ளனர்.

ரசிகர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு அசத்தலான சயின்ஸ் பிக்சன் படமாக இப்படம் இருக்கும். ஆதித்யா டிவி புகழ் விக்னேஷ் ராமமூர்த்தி நாயனாக அறிமுகமாகிறார். நிவேதா & மித்ரா நாயகிகளாக நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஒரே கட்டமாக ஊட்டியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திரையில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புது அனுபவமாக இப்படம் இருக்கும்.

Comments (0)
Add Comment