தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்.பி.யாகவும், கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் சிலை கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு எஸ்.பி.யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி ப்ரியா தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக இருந்த எஸ்.வளா்மதி – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராகவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.பாஸ்கர பாண்டியன் – திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியராக இருந்த அமா் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.