பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவெடுக்கப்படவில்லை!

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அவா் தாக்கல் செய்துள்ள பதிலில், பொது சிவில் சட்டம் குறித்த பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு 21-வது சட்ட ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும்,

அந்த ஆணையத்தின் பதவிக் காலம் 2018, ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டதால் இந்த விவகாரம் 22-ஆவது சட்ட ஆணையத்திடம் உள்ளது என்றும், ஆகையால், பொது சிவில் சட்ட அமலாக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் 2020, பிப்ரவரி 21-ஆம் தேதி அமைக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவா் மற்றும் உறுப்பினா்களை கடந்த ஆண்டு நவம்பா் மாதம்தான் மத்திய அரசு நியமித்தது.

இந்த நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் 22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment