“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!

தெலுங்கு சினிமாவின் தனித்துவமான அடையாளம் இயக்குநர் கே.விஸ்வநாத்.
சுவாதி முத்யம் துவங்கி சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிற விஸ்வநாத்தின் திரைப்பயணம் துவங்கியது சென்னை வாஹினி ஸ்டூடியோவில்.

எட்டு ஆண்டுகளாக அங்கு ஒலிப்பதிவாளராக இருந்து அதன் பிறகே இயக்குநர் ஆகி, நடிகராகவும் ஆகியிருக்கிறார்.

பல வெள்ளிவிழாப் படங்களை எடுத்திருக்கிற அவர் தன்னைப் பற்றி “அடிப்படையில் நான் திருப்தியுள்ள மனிதன். மற்றவர்களிடம் நல்ல அம்சங்களையே பார்க்க விரும்புகிறேன்.

ஒரு கெட்ட ஆளிடம் கூட நல்ல தன்மை இருப்பதைப் படத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறேன்” என்று அமைதியாகச் சொன்ன கே.விஸ்வநாத்தின் எண்ணத்திற்குச் சாட்சியங்கள் அவருடைய படங்கள்.

சலங்கை ஒலியில் கமலின் துடிப்பான நடனத்தையும், சங்கராபரணத்தில் ‘மானஸ சஞ்சரரே’ போன்ற சாம்பிராணிப் புகையைப் போன்ற பாடலையும் மறக்க முடியுமா?

“ஸ்வயம் க்ருஷி” தெலுங்குப் படப்பிடிப்பில் சிரஞ்சீவியுடன் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் கே.விஸ்வநாத்.

Comments (0)
Add Comment