ஒடிசா அமைச்சர் நபா தாஸைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் நபா கிஷோர் தாஸ்.

பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று மதியம் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.

காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அமைச்சர் நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அமைச்சரின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தன. இந்தச் சம்பவத்தில் கார் அருகே அவர் சுருண்டு விழுந்தார்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ், அமைச்சர் நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அமைச்சர் நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமானது.

இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார்.

இதனிடையே, அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளரை உள்ளூா் மக்கள் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)
Add Comment