ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழத்திய ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் போட்டி சமநிலையில் இருந்தது.
இதனால் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு கடைப்பிடிக்கப்பட்டது.
இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழத்தி ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை ஹாக்கியில் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜெர்மனி அசத்தியுள்ளது.