மார்கன் ஹெளஸ்ஸேலின் நம்பிக்கை மொழிகள்:
இந்திய அளவில் பிரபலமான நூல் பதிப்பு நிறுவனமான ஜெய்கோ பதிப்பகம் ‘பணம் சார் உளவியல்: மார்கன் ஹெளஸ்ஸேல்’ என்ற உலகப் புகழ்பெற்ற நூலை வெளியிட்டுள்ளது.
செல்வம், வேட்கை, மகிழ்ச்சி ஆகியவை குறித்த எக்காலத்துக்கும் பொருந்தும் படிப்பினைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
ஒவ்வொருவரிடம் இருக்கவேண்டிய நூல் என ஜேம்ஸ் கிளியர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
பணம் சம்பாதிப்பது, சேமிப்பது, பெருக்குவது மற்றும் பாதுகாப்பது பற்றிய எதார்த்தமான வழிகாட்டுதல்கள் நிறைந்த புத்தகம்.
தாய் இணையதள வாசகர்களுக்காக பணத்தைப் பற்றிய உளவியல் பார்வைகள்…
வரலாறு எப்போதும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி எவ்வித மாற்றமுமின்றி நிகழ்வதில்லை. மனிதன் மட்டுமே மாறாமல் இருக்கிறான். பணம் குறித்த நமது கண்ணோட்டத்தில் இந்தக் கூற்று பொருந்தி வருகிறது.
பணம் குறித்த அனுமானம் மனிதனுக்கு மனிதன் மிகப்பெரும் அளவில் வித்தியாசத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. உனக்கு எது பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறதோ அது எனக்கு ஞானமாகக்கூடத் தெரியலாம்.
சில படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்வதற்கு முன்னர், அத்தகையவற்றை நாம் அனுபவித்தல் அவசியம்.
நம்மில் பலர் ஓய்வுக்காலத்திற்காகப் பணத்தைச் சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் திறனற்றவர்களாகவே உள்ளோம் என்னும் உண்மை யாருக்கும் ஆச்சரியம் தருவதாக இல்லை.
தனிப்பட்ட மனித உழைப்பைத் தவிர, வாழ்க்கையை நடைமுறைப்படுத்தும் மெய்யான சக்திகளாக அமைபவை அதிர்ஷ்டமும் இடர்களும்.
நீங்கள் ஒரு மோசமான விளைவைச் சந்தித்துள்ளீர்கள் என்றால், அதற்கான காரணம் ஒரு மோசமான முடிவாக மட்டுமே இருக்கமுடியும்.
தனிப்பட்டவர்களைப் பற்றியும், குறிப்பிட்ட சூழலில் அமைந்த உதாரணங்களைப் பற்றியும் மட்டுமே முழு கவனத்தில் கொள்ளாமல் பரந்த நிலைப்பாடுகளை ஆய்வதில் கவனம் காட்டுதல் வேண்டும்.
இன்றைய உலகில் போதும் என்ற நிறைவுக்கான எல்லையே இல்லாத ஒரு நிலைதான் மிகவும் அச்சத்தை விளைவிக்கும் காரணியாக உள்ளது.
உங்களுக்கு எது முக்கியமானதோ, அதைப் பணயம் வைத்து உங்களுக்கு எது முக்கியமில்லையோ அதைப் பெற நினைக்கும் முறை பொருளற்றது.
உங்கள் இலக்கை அடைந்த பிறகு மேலும் தேவையென்று இல்லாமல் இருப்பதே மிகவும் கடினமான பொருளாதாரத் திறமையாகும்.
மகிழ்ச்சி என்பது எதிர்பார்ப்புகளை இழத்தலிலே ஏற்றம் பெறுகிறது.
உங்களைச் சுற்றி இருப்பவர்களின் செல்வத்தைவிட உங்களிடம் குறைவான செல்வம் இருந்தாலும், போதும் என்ற நிறைவை அடைதலே வெற்றியாகும்.
போதும் என்பது மிகக்குறைவானது அன்று.
நல்ல முதலீடு என்பது நம்மிடம் தங்கக்கூடிய நல்ல லாபத்தை ஈட்டித்தருவதாகவும், நீண்ட நாட்களுக்கு திரும்பத் திரும்ப நடக்கும் நிகழ்வாகவும் இருத்தல் அவசியம்.
கொழுத்த லாபங்களைவிட, நான் நிலையான சேமிப்பையே விரும்புகிறேன்.
அத்தகைய நிலையான சேமிப்பால், மிகப்பெரும் அளவிலான லாபத்தை நான் அடைதல் இயலும்.
திட்டமிடுதல் என்பது முக்கியமானதுதான் என்றாலும், ஒவ்வொரு திட்டத்திலும் முக்கியமானது, அந்தத் திட்டம் திட்டமிட்டபடி நடக்காதபோது, செய்யவேண்டியது என்ன என்பதைத் திட்டமிடுதலே ஆகும்.
நீண்ட காத்திருப்பின் இறுதியில் மிகச்சிறிய நிகழ்வுகள்கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தவல்லன
வெற்றி என்பது மிகச்சிறிய செயல்களால் ஆனது என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம்
காலத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதே பணத்தால் நாம் பெறும் மிகப்பெரிய லாபம்.
பா. மகிழ்மதி