சமூக வலைதளங்களில் ஏமாற்றும் விளம்பரங்கள்!

  • ஒன்றிய அரசு எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் ஒரு பொருளைக் காண்பித்து அதேபோன்று தோற்றமுள்ள குறைந்த தரத்திலான மற்றொரு பொருளை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

அந்த விதிமுறைகளை வெளியிட்டுப் பேசிய நுகா்வோர் விவகார செயலா் ரோஹித் குமார் சிங், “சமூக வலைதள விளம்பர சந்தை 2022-ம் ஆண்டில் ரூ.1,275 கோடியாக இருந்தது. 2025-ல் இது ரூ.2,800 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சமூக வலைதளங்கள் மூலம் காண்பிக்கப்படும் பொருள்களின் விளம்பரம் எந்த நிறுவனத்தைச் சோ்ந்தது, விளம்பரப்படுத்துபவரின் விவரம் ஆகியவை அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஒரு பொருளைக் காண்பித்து அதைப்போல் தோற்றமுள்ள தரம் குறைந்த வேறு பொருளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிகளை மீறும் போலி பொருள் தயாரிப்பாளா்கள் மீது ரூ.10 லட்சம் அபராமும் தொடா்ந்து மீறும் நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

அந்தப் பொருளின் விளம்பரத்துக்கு 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்” என்று எச்சரித்தார்.

Comments (0)
Add Comment