– பரூக் அப்துல்லா
காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மட்டுமே அதை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
பேச்சுவார்த்தைக்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பாஜக அரசு தயக்கம் காட்டுகிறது. பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் நம் நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாமல் வெறுப்பை பரப்புகின்றனர்.
மக்களின் இதயங்களில் இருந்து வெறுப்பை அகற்றாவிட்டால், நேர்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தொடங்கியதில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.