மூவி வுட் தளத்தில் வெளியாகும் ‘லேபர்’ திரைப்படம்!

இன்றைய சூழலில் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்கிவிட்டு அதேசமயம் சிறிய படம் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி தளங்கள் தான். அவற்றில் கூட பல தளங்கள் தற்போது படங்களை வாங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் நிலையில் மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறது.

மூவி வுட் ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக ‘லேபர்’, ‘குற்றநிலை’ மற்றும் பீச்சாங்கை கார்த்தி நடித்துள்ள ‘குருடன்’ ஆகிய திரைப்படங்களை மூவி வுட் தளம் வெளியிடுகிறது.

‘லேபர்’ படத்தை அறிமுக இயக்குனர் சத்தியபதி இயக்கியுள்ளார். இது தமிழகத்தில் வாழும் கட்டிட தொழிலாளர்கள் வாழ்வியலை மையப்படுத்தி எதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ள படம் ஆகும்.

இந்தப் படத்திற்கு 13 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

கட்டடத் தொழிலாளர்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் படமாக இருக்கும்.

அதுமட்டுமல்ல, அதிக குளோசப் காட்சிகள் இல்லாமல் தமிழ் சினிமாவில் வாழ்வியலை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

பிரபல கேரள திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்தராஜ் ஆகியோர் படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர்.

Comments (0)
Add Comment