ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குக் குவியும் பாராட்டுகள்!

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கானப் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கோல்டன் குளோப் என்பது ஆஸ்கர் விருதுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இப்பாடல் ஆஸ்கர் விருதையும் பெறலாம் என்று சினிமா நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராஜமௌலி ஆர்ஆர்ஆர் இயக்கிய படத்துக்கு மரகதமணி (கீரவாணி) இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் கோல்டன் குளோப் விருது பெற்ற இசையமைப்பாளருக்கும், இயக்குநர் ராஜமவுளி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையாராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment