சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விஞ்ஞானிகளை பூமிக்கு அழைத்து வரும் சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால், புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக அடுத்த மாதம் 20-ம் தேதி மீட்பு விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், ”ரஷிய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ ஆகியோரை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது.
எனவே, அவர்களுக்காக சோயுஸ் எம்எஸ்-23 ராக்கெட் பிப்ரவரி 20-ம் தேதி ஆட்கள் யாரும் இன்றி செலுத்தப்பட உள்ளது. சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பும்” எனக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 7 பேர் உள்ளனர். அவசர காலத்தில் வீரர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்றால் விண்வெளி நிலையத்தில் நான்கு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரே ஒரு மீட்பு விண்கலம் மட்டுமே உள்ளது.
தற்போது எம்எஸ்-22 ராக்கெட் தகுதியற்றதாகக் கருதப்படுவதால் அதற்கு மாற்றாக மற்றொரு விண்கலம் ராக்கெட்டில் அனுப்பப்பட உள்ளது.