15.02.1970 அன்று வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார்.
“எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில் இப்படி ஒரு பத்திரிகை வெளிவருவதை நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
அதிலே கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், படிக்கும்போது நகைச்சுவை தோன்றும் வண்ணம் எழுதி இருக்கும் பாங்கைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
சோ-வின் இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும். அவை நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்று விழைகிறேன்”