கீழடியில் விரைவில் ‘அகழ் வைப்பகம்’!

அமைச்சா் தங்கம் தென்னரசு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வைப்பகக் கட்டுமானப் பணிகளை  மாநில தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய அவா், அகழாய்வுப் பணியில் கிடைத்துள்ள தொல்பொருள்களின் ஆய்வு முடிவுகளின்படி, தமிழா்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் நகர நாகரிகத்துடன் வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

கீழடி, மணலூா், அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, கீழடியில் ரூ. 1.13 கோடியில் கலைநயத்துடன் புதிய அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்தப் பணிகள் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Comments (0)
Add Comment