13,569 கி.மீ. நிற்காமல் பறந்த பறவை!

பட்டைவால் மூக்கன் என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 13,569 கிமீ தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 13-ம் தேதி அலாஸ்காவில் இருந்து பறக்க தொடங்கிய இந்த பறவை சுமார் 11 நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்று கிழக்கு டாஸ்மேனியாவில் உள்ள ஆன்சன்ஸ் விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது.

இதற்குமுன் 2020-ல் இதே இனத்தை சேர்ந்த பறவை 217 மைல் பறந்ததே சாதனையாக இருந்தது.

Comments (0)
Add Comment