எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டிய வரலாற்றுப் படம்!

14.04.1986-அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய புகைப்படம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயில் முகப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

கடந்த  டிசம்பர் 29 ஆம் தேதி இந்த வரலாற்றுப் பதிவைக் காணவில்லை.

இது சம்பந்தமாக இயக்குநரிடம் புகார் செய்யப்பட்டும் மேல் நடவடிக்கை இல்லை. இதற்காக அவரிடம் தமிழ் அறிஞர் பெருமக்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதில், தாங்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எதிரானவர் இல்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தீர்கள்.

ஆனால் உங்கள் ஆட்சியில் பணிபுரியும் உலகத் தமிழ்ச் சங்க ஊழியர்கள் எம்ஜிஆர் அவர்களது படத்தை அகற்றியுள்ளனர்.

ஆகவே அகற்றிய படத்தை மீண்டும் வைக்கவேண்டும் என்பதே இக்கடிதத்தின் நோக்கமாகும்.

நன்றி!

அ.இருளப்பன்

தலைவர், தொல்காப்பியர் மன்றம்

மதுரை மற்றும் தமிழ்நாடு கல்வி பாதுகாப்புச் சங்கம் 

Comments (0)
Add Comment