சுயமரியாதையை இழக்க விரும்பாத பெண்!

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித் தான்’ படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போதிருக்கிற இளைய தலைமுறையினருக்கு அந்தப் படம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம்.

அந்தப் படத்தின் சிறப்பம்சம் அதன் அழகான திரைக்கதை. நினைவில் நிற்கிறபடியான வசனங்கள்.

ஶ்ரீப்ரியா, கமல், ரஜினி என்று பல நட்சத்திரங்களுடன் மாறுதலான ஒளிப்பதிவுடன் கறுப்பு வெள்ளையில் அசத்திய படம்.

அந்தப் படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது மஞ்சு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஶ்ரீப்ரியா.

தனக்கென்று அழுத்தமான நம்பிக்கையுடனும், பிடிவாதமான சில இயல்புடன் வாழும் ஶ்ரீப்ரியாவின் தனித்துவம் தான் அந்தப் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும்.

அன்றைக்கிருந்த நிலையில் ஒருவிதமான கலாச்சார அதிர்வையும் ஏற்படுத்தியிருந்தது ‘அவள் அப்படித் தான்-1.

அதன் தாக்கத்தோடு தான் ‘அவள் அப்படித்தான்-2’ படத்தைப் பார்க்கும் போது தவிர்க்க முடியவில்லை.

சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் இதில் ஆசிரியையாக நடித்துள்ள ஸ்நேகா பார்த்திபராஜா. எளிமையான, வலுவான வசனங்கள்.

குடும்ப அமைப்பில் உறவுகளிடம் நம்பிக்கை சரிந்தால், அதை ஒரு ஆசிரியை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஒன்றரை மணி நேரத்தில் சிக்கனமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளரே படத்தின் நாயகனாகவும் இருக்கிறார்.

விரைவில் திரையரங்கிலோ, ஓ.டி.டி. தளத்திலோ வெளியாக இருக்கிறது  ‘அவள் அப்படித்தான்-2’ திரைப்படம்.

Comments (0)
Add Comment