எப்போதும் மாறாத பதில் எப்போது கிடைக்கும்? 

சென்னை புத்தகக் காட்சிக்கான நூல் அறிமுகம்:

எம்.கே.மணி எழுதிய ‘ஃபிலிம் மேக்கர்யா’ என்ற சினிமா மற்றும் இலக்கியம் குறித்த கட்டுரைகள் தொகுப்பு நூலை  ‘யாவரும்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரியரான மணியின் முதல் சிறுகதைத் தொகுப்பு 2017-ல் வெளியானது.

தமிழ், மலையாள திரைக்கதை ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், திரை விமர்சன உரையாடல்கள் என துறைசார் எழுத்துக்களை எழுதியுள்ளார்.

சமூக ஊடக / இணைய விவாதங்களில் காத்திரமானவைகளும் உண்டு. அது தற்காலத்தில் நிகழும் மாற்றங்கள், சூழல், அரசியலைக் கொண்டு கலை இலக்கியத்தில் பேசிக் கொண்டிருக்கும் விஷயங்களையும்,

ஏற்கனவே பேசப்பட்ட விஷயங்களையும் சூடு தணியாத உரையாடல்களாக வைத்திருக்க முடியும்.

காலத்தால் மட்டும் கேட்கப்படும் கேள்விகளின் தொனி மாறிவிடுகிறது.

ஆனால் கேள்விகள் மாறினாலும் எக்காலத்திற்கும் மாறாத பதில் ஒன்று இருக்கிறது. அதுவே அசலான படைப்பு மனநிலையின் இயல்பில் வெளிப்படும். அதை மட்டுமே முன்வைத்து பேசும் கட்டுரைகள் மணி எம் கே மணியுடையது.

சிலவற்றைக் கொஞ்சம் சத்தமாகத் தான் சொல்லவேண்டியிருக்கிறது என்று நூலைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது யாவரும் பதிப்பகம்.

***

பிலிம் மேக்கர்யா:
மணி எம்.கே. மணி

கடை எண்: 24 பி, முதல்தளம்,
எஸ்ஜிபி. நாயுடு காம்ப்ளக்ஸ்,
வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி,
சென்னை – 42
விலை ரூ. 110
நூலைப் பெற:  90424 61472

Comments (0)
Add Comment