-கவிஞர் கண்ணதாசன்
கேள்வி :
உங்களுக்கு ஆஸ்தானக் கவிஞர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கவிஞர் கண்ணதாசன் பதில் :
இந்தப் பதவி எவ்வளவு பெரியது, சிறியது என்ற விஷயத்தை விட, எவ்வளவு விஷயங்களை மறந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே முக்கியமாகும்.
நான் எம்.ஜி.ஆரைத் துன்புறுத்திய அளவுக்கு அவர் என்னைத் துன்புறுத்தியது கிடையாது.
காரணங்களைப் பரிசீலிக்காமல் விட்டுவிட்டு ஒரு எதிரி என்றே என்னை வைத்துக் கொண்டே பார்த்தாலும், ஊர் மரியாதையைப் பெரிதாகக் கருதி அவர் இதைச் செய்திருக்கிறார் என்றே கருத வேண்டும்,
ஆங்கிலத்தில் ‘மெக்னானிமிட்டி’, ‘எந்த்ராஸ்மன்ட்’ என்று இரண்டு வார்த்தைகள் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் என்பது அதைத்தான் குறிக்கிறது.
இந்தப் பதவியின் மூலம் நான் உயர்ந்தேனோ இல்லையோ அவரது பரந்த உள்ளம் மேலும் விரிந்திருக்கிறது.
- 1978 ஆம் ஆண்டு ‘மாலை முரசு’ நாளிதழில் கவிஞர் கண்ணதாசன் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.