கடந்து போதலின் அழகு!

வண்ணதாசனின்  2 நூல்கள் அறிமுகம்:

எழுத்தாளர் வண்ணதாசனின் இரு நூல்கள் வெளிவருகின்றன. அகிலம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெயிலில் பறக்கும் வெயில் என்ற கவிதை நூலையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

“என்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கும் என் எழுத்துக்களே போதுமானது. ஆனாலும் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ எத்தனையோ, தவிர்க்க முடியாதவை.

“காதலினால் அல்ல கருணையினால்” என்றும், “கருணையினால் அல்ல காதலினால்” என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன” என்கிறார் நூலின் பின்னுரையில் வண்ணதாசன்.

கல்யாணிஜி என்ற பெயரில் வெளியாகும் ‘வெயிலில் பறக்கும் வெயில்’ என்ற கவிதை நூலில் இடம்பெற்றுள்ள கவிதை.

உங்களைப் பார்க்கும் போது
நீங்கள் கடந்து போய்க்கொண்டு இருந்தீர்கள்.
உங்களைப் பார்த்து முடிப்பதற்குள்
நீங்கள் கடந்து போய்விட்டீர்கள்.
கடந்து போதலின் அழகு
உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இத்தனை இலைகளில்
அந்த ஒரு இலை மட்டும் ஏன்
நடனம் இடுகிறது?
இத்தனை இலைகளில்
அந்த ஒரு இலை மட்டும் ஏன்
துக்கத்தில் குலுங்குகிறது?
இத்தனை இலைகளில்
அந்த ஒரு இலையை மட்டும் ஏன்
நான் பார்க்கிறேன்?

அகிலம்: வண்ணதாசன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
77, 53வது தெரு, அசோக் நகர், சென்னை -8 3
விலை ரூ. 170

தொடர்புக்கு: 044-24896979, 9840952919

வெயிலில் பறக்கும் வெயில்: கல்யாண்ஜி
விலை ரூ. 75

Comments (0)
Add Comment