எண்ணத்தின் ஆற்றல் ஒருபோதும் வீணாகாது!

ரமண மகரிஷியின் பொன்மொழிகள்:

நல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும்

சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும்.

நம்மைத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்த்திருத்தம் தானாகவே சீர்திருத்தம் பெறும்.

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. 

மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவைபோல மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி.

எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொர் எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கும். எண்ணத்தின் ஆற்றல் ஒரு போதும் வீண் போகாது.

மனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.

மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம். ஒன்றாகிப்போகும்.

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.

குரு கட்டாயமாகத் தேவை. மனிதனை நல்வழிப்படுத்த குருவால் மட்டுமே முடியும்.

Comments (0)
Add Comment